பச்சிளம் குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்… ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய மாணவி… கடைசியில் சிக்கியது எப்படி…? குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பச்சிளம் குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்… ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய மாணவி… கடைசியில் சிக்கியது எப்படி…? குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!

Published

on

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், கடுமையான வயிற்று வலி காரணமாக வந்தனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு கழிவறைக்குச் சென்ற அவருக்கு எதிர்பாராதவிதமாகப் பிரசவம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பிறந்த குழந்தையை அங்கிருந்த காற்றோட்ட ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் தனது வார்டுக்குச் சென்று படுத்துக்கொண்டார்.

மருத்துவமனை வளாகத்தில் கிடந்த குழந்தையை மீட்ட ஊழியர்கள், தீவிர விசாரணை நடத்தி அந்த மாணவியைக் கண்டுபிடித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பகுதி நேர வேலையின் போது பழகிய வெளிமாநிலப் புலம்பெயர் தொழிலாளி ஒருவரால் தான் கர்ப்பமடைந்த விபரம் தெரியாமல், அடிவயிற்றில் ஏதோ கட்டி இருப்பதாக நினைத்து அவர் சிகிச்சைக்காக வந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

மாணவியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், குடும்பத்தினராலும் அவரது உடல் மாற்றத்தைக் கவனிக்க முடியாமல் போயுள்ளது. தற்போது தனக்கு இந்தக் குழந்தை வேண்டாம் என குழந்தைகள் நலக்குழுவிடம் அந்த இளம்பெண் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

அந்தப் பச்சிளம் குழந்தை தற்போது ஆலப்புழா மருத்துவக் கல்லுாரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையைப் பெற்றெடுத்துக் கொடூரமாக வீசியெறிந்த அந்த மாணவி மீது போலீசார் தற்போது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in