மா.செ-க்கள் ஆதிக்கத்திற்கு அதிரடி செக்..! உதயநிதி கையை ஓங்க வைக்க ஸ்டாலின் போட்ட புதிய ‘ஸ்கெட்ச்… கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மா.செ-க்கள் ஆதிக்கத்திற்கு அதிரடி செக்..! உதயநிதி கையை ஓங்க வைக்க ஸ்டாலின் போட்ட புதிய ‘ஸ்கெட்ச்… கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!!

Published

on

திமுகவில் பல தசாப்தங்களாகப் பலம் வாய்ந்த ‘குறுநில மன்னர்களாக’ வலம் வரும் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியான ஒரு நிர்வாகச் சீர்திருத்தத்தைக் கையில் எடுத்துள்ளார். கட்சிக்குள் வேட்பாளர் தேர்வு முதல் முக்கியப் பதவிகள் வரை அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மா.செ-க்களின் அதிகாரத்திற்கு ‘ஆப்பு’ வைக்கும் விதமாக, 234 தொகுதிகளுக்கும் நேரடியாகத் தலைமையே ‘தொகுதிச் செயலாளர்களை’ நியமிக்கப் புதிய வியூகம் தீட்டப்பட்டுள்ளது.

அறிவாலய வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள இந்தத் தகவல் தற்போதைய சீனியர் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கடுமையான கலக்கத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் உதயநிதி ஸ்டாலினின் அதிகாரத்தைப் பலப்படுத்துவதாகவும், முதிய மா.செ-க்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

Advertisement

புதிய நடைமுறையில் தொகுதிச் செயலாளர்கள் நேரடியாகத் தலைமையுடன் தொடர்புகொள்வதால், மா.செ-க்களின் தலையீடு குறைந்து, தேர்தல் காலங்களில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், உதயநிதி தரப்பு இந்த அதிரடி நகர்வை, புதிய கட்சிகளின் எழுச்சிக்கு மத்தியில் சோர்வடைந்துள்ள திமுக-வை அடுத்தகட்டத் தேர்தல்களுக்குத் தயார்படுத்தும் வியூகமாகப் பார்க்கிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in