சும்மா கத்தாதீங்க.! உரிமைத் தொகையில உங்க தலைவர் ஸ்டாலின் இருந்தா.. ரூ.1,28,000 கடன் சுமைக்கும் அவர்தான் காரணம்… திமுக ரகுபதியை அலறவிட்ட நிதியமைச்சர் மரிய வில்சனின் அதிரடி அட்டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சும்மா கத்தாதீங்க.! உரிமைத் தொகையில உங்க தலைவர் ஸ்டாலின் இருந்தா.. ரூ.1,28,000 கடன் சுமைக்கும் அவர்தான் காரணம்… திமுக ரகுபதியை அலறவிட்ட நிதியமைச்சர் மரிய வில்சனின் அதிரடி அட்டாக்..!!

Published

on

“தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ₹1,28,000 கடன் சுமை ஏறியதற்கு உங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் காரணம்” என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதிக்குத் தமிழக நிதியமைச்சர் என். மரிய வில்சன் சட்டப்பேரவையில் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, “மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் போன்ற மக்கள் நலத்திட்டங்களால் பயனடைந்த பொதுமக்களின் மனங்களில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்கிறார்” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு உடனடியாகப் பதிலளித்து முழங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், “மகளிர் உரிமைத் தொகையில் உங்கள் தலைவர் இருக்கிறார் என்கிறீர்கள். அப்படியென்றால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் பெரும் கடன் சுமையைத் திணித்ததும் அவர்தானே?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், “நீங்கள் அவையில் சத்தம் போடுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை, ரிலாக்ஸாக இருங்கள்” என்று அவர் சாடியதால் தவெக கூட்டணி உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்க, சட்டப்பேரவை வளாகம் கடுமையான அரசியல் விவாதத்தால் பரபரப்படைந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in