“‘இறங்கவே மாட்டேன் அடம் பிடித்த பயணி..!’ ஆத்திரத்தில் பேருந்தை நிறுத்தாமல் மிதித்த டிரைவர்.. உயிரைப் பணயம் வைத்த பயணி.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“‘இறங்கவே மாட்டேன் அடம் பிடித்த பயணி..!’ ஆத்திரத்தில் பேருந்தை நிறுத்தாமல் மிதித்த டிரைவர்.. உயிரைப் பணயம் வைத்த பயணி.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

தமிழ்நாடு ஓசூரில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியைப் பிடித்தபடி பயணி ஒருவர் சுமார் 500 மீட்டர் தூரம் ஆபத்தான முறையில் தொங்கியபடியே சென்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து பயணத்தின்போது குறிப்பிட்ட இடத்தில் இறங்குமாறு ஓட்டுநர் கூறியதாகவும், அதற்கு அந்தப் பயணி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

తమిళనాడులోని హోసూరులో బస్సు ముందు అద్దాన్ని పట్టుకుని ఓ ప్రయాణికుడు సుమారు 500 మీటర్లు వేలాడుతూ వెళ్లిన ఘటన కలకలం రేపింది.

దీనిపై TNSTC డ్రైవర్ ఎం. రమేష్ కుమార్‌ను రవాణా సంస్థ సస్పెండ్ చేసింది.

ప్రయాణం మధ్యలో దిగాలని చెప్పినా ఆ వ్యక్తి నిరాకరించడంతో తొలుత డ్రైవర్‌తో వాగ్వాదం… pic.twitter.com/q8vzrFM4y3— RTV (@RTVnewsnetwork) August 10, 2026

இதனைத் தொடர்ந்து, பேருந்தை நிறுத்தி ஓட்டுநரிடம் கேள்வி கேட்க அந்தப் பயணி முயன்றபோது, அவர் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியைப் பிடித்துள்ளார். ஆனால், பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் வாகனத்தை முன்னோக்கி இயக்கியதால், அப்பயணி கண்ணாடியைப் பிடித்தவாறே பல மீட்டர் தூரம் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டே சென்றுள்ளார். இந்த விபரீத நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்து ஓட்டுநர் எம். ரமேஷ் குமாரை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in