LATEST NEWS
திமுகவிடம் காசு வாங்கிவிட்டாயா..? ஏன் இவ்வளவு பாசமும் பரிவும்… திருமாவை கிழித்து தொங்கவிட்ட இடும்பவனம் கார்த்தி..!!
திமுகவை ஒருபுறம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ‘தீயசக்தி’ என்று விமர்சிக்கும் நிலையில், மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ‘நட்புச்சக்தி’ எனக் கூறி வருவதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் சாடியுள்ளார். மேலும், திமுகவும் தவெகவும் ஒரே அணிக்குள் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் விரும்புவதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக மீது இவ்வளவு பாசமும் பரிவும் காட்டும் திருமாவளவன் மீது சமூக ஊடக ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ (Virtual Warriors) ஏன் எவ்வித விமர்சனமும் வைப்பதில்லை என்று இடும்பவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். “திமுகவிடம் காசு வாங்கிவிட்டாயா?” என்று திருமாவளவனை நோக்கிப் பொங்கி எழ வேண்டியதுதானே என கார்த்திக் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
