விஜய் பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த ‘அந்த’ காரியம்…பல வருடங்களுக்கு பின் வனிதா உடைத்த ரகசியம்…ரஜினி அங்கிள் நீங்க ஏன் இப்படி… வனிதா கேட்ட கேள்விக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ‘மாஸ்’ பதில்…! – cinefeeds
Connect with us

CINEMA

விஜய் பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் செய்த ‘அந்த’ காரியம்…பல வருடங்களுக்கு பின் வனிதா உடைத்த ரகசியம்…ரஜினி அங்கிள் நீங்க ஏன் இப்படி… வனிதா கேட்ட கேள்விக்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ‘மாஸ்’ பதில்…!

Published

on

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், தளபதி விஜய் ஜோடியாக ‘சந்திரலேகா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அத்திரைப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்தார். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், திடீரென திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார். எனினும், அவரது திருமண வாழ்க்கை பல திருப்பங்களையும் சோகங்களையும் சந்தித்தது. முதல் கணவர் ஆகாஷ் மூலமாக ஒரு மகனும் இரண்டு மகள்களும் பிறந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார். அதன் பின்னர் அவர் செய்த அடுத்தடுத்த திருமணங்களும் அவருக்குச் சரியாக அமையாததால், தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளையும் சவால்களையும் வனிதா எதிர்கொள்ள நேரிட்டது.

தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை கன்னிவெடிகள் வெடித்தாலும், வனிதா எப்போதும் தனது அசாத்திய தைரியத்திற்காகவே அறியப்படுபவர். மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசும் குணம் கொண்ட அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மீண்டும் சின்னத்திரையில் கவனம் பெற்றார். ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு மட்டுமின்றி, ‘மிஸஸ் & மிஸ்டர்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவிய போதிலும், தன் மீதான விமர்சனங்களையும் தோல்விகளையும் தவிடுபொடியாக்கி விட்டு, ஒரு தைரியமான பெண்ணாகத் தொடர்ந்து தனது வாழ்வாதாரத்திற்கான பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறார்.

Advertisement

இந்நிலையில், அவர் தனது முதல் படமான ‘சந்திரலேகா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான ஒரு பழைய நினைவைப் பகிர்ந்துகொண்ட பேட்டி தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. “படப்பிடிப்பின் முதல் நாள் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து எனது முதல் ஷாட்டுக்கு கிளாப் அடித்தார். ஷாட்டுக்கு முன்பு எனது மேக்கப்பை சரி செய்வதற்காக நான் கண்ணாடி கேட்டேன், உடனே ஒரு கண்ணாடியும் வந்தது. நான் மேக்கப் போட்டு முடித்த பிறகுதான் தெரிந்தது, அந்தக் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு நின்றது சூப்பர் ஸ்டார் ரஜினி அங்கிள் தான்! அதிர்ச்சியாகி நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ‘அதெல்லாம் ஒன்னும் இல்ல கண்ணா, உனக்கு ஓகே-தானே, ஷாட் ரெடி’ என மிகவும் ஜோவியலாகப் பேசினார்” என்று வனிதா அந்தப் பேட்டியில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in