CINEMA
ஆஸ்கர் விருது விழாவில் தங்கலான்….? தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த மாஸ் அப்டேட்…!!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைத்துள்ளார் . இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இதனை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன் தங்கலான் படத்தை ஆஸ்கர் விருது விழாவிற்கு பரிந்துரை செய்ய தேசிய திரைப்பட கூட்டமைப்பிடம் விண்ணப்பித்துள்ளோம். இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக ஆஸ்கரில் தங்கலான் இடம் பெறும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.