CINEMA
விசில் போடு…! “வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு”…. கடைசி உலகப்போரின் புரோமோ பாடல் வெளியீடு…!!
இன்றைய இளம் சமுதாயத்திற்கு பிடித்த ஒரு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. இவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது என்று சொல்லலாம்.. இசையமைப்பது மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் கடைசியாக இவர் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
தற்போது அடுத்ததாக “கடைசி உலகப் போர்” படத்தை இயக்கி அந்த படத்தை தயாரித்து நடித்து உள்ளார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன்பாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது படத்தின் புரோமோ பாடல் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.