CINEMA
“ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு” எல்லாரையும் ஓட விடுங்க சார்…. விஜய் சேதுபதிக்கு நச் அட்வைஸ்…!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடந்த 2017 வருட முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது மக்களுக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சியாகவே இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த முதல் சீசன் முதல் கடந்த வருடம் நிறைவடைந்த ஏழாவது சீசன் வரை கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
ஒவ்வொரு வருடமும் பரபரப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. இதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் சிலர் அட்வைஸ் கொடுத்துள்ளனர்.