ஒன்னா இரண்டா எத்தனை வேஷம் போடுறாங்க…. எல்லாமே இன்னைக்கு மாறிடும்…. பிக்பாஸில் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்….!!!! – cinefeeds
Connect with us

TRENDING

ஒன்னா இரண்டா எத்தனை வேஷம் போடுறாங்க…. எல்லாமே இன்னைக்கு மாறிடும்…. பிக்பாஸில் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 60 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து வர போட்டியாளர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்கள்.

கடந்த வாரம் போட்டியாளர்களை கமல்ஹாசன் கடுமையாக எச்சரித்த நிலையில் தற்போது போட்டியாளர்கள் ஓரளவு விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனிடையே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் இந்த வாரம் வழக்கம் போல ஒரு எலிமினேஷன் மட்டுமல்லாமல் டபுள் எலிமினேஷன் இருக்கிறது என கமல்ஹாசன் கடந்த வாரமே தெரிவித்திருந்த நிலையில் அந்த இரண்டு பேர் யார் என காத்திருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி உள்ளது. இது அதில் கமல்ஹாசன், இவங்க எத்தனை வேஷம் போட்டாலும் நல்ல மழை பொழியும் போது உண்மை முகம் தெரிய வந்திருது. இருந்தாலும் அதற்கு இன்னொரு வேஷம் போட்டிருக்காங்க, இப்படி எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை வெளியே தான் வரும், இவர்களுக்கு இவர்களை தான் பிடிக்கும் என கமல்ஹாசன் பேசியுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in