CINEMA
நாகசைதன்யா-சோபிதா நிச்சயதார்த்த தேதிக்கு பின்னாடி… இப்படி ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்குதாமே…. என்ன தெரியுமா…??
நடிகை சமந்தாவும், நாத சைதன்யாவும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் தெலுங்கு ரீமேக்கில் ஒன்றாக நடித்த மூலம் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் நான்கு வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகை சோபிதாவை நாகசைதன்யா காதலிக்க இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்கள். ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகவும் சிம்பிளான முறையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இவர்களுடைய நிச்சயதார்த்த தேதிக்கு பின்னால் இருக்கும் ஸ்பெஷல் விஷயம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 8.8.2024 ஜோதிட ரீதியாக சக்தி வாய்ந்த நிகழ்வாக கருதப்படும் லயன்ஸ் கேட் போர்ட்டல் திறக்கப்படும். பூமியானது சிறிய நட்சத்திரத்தோடு இணையும் போது இந்த போர்ட்டல் திறக்கப்படுகிறது. தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான தனித்துவமான வாய்ப்பை உருவாக்குகிறது. இந்த காலகட்டத்தில் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கிறது என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.