CINEMA
நிச்சயம் முடிந்ததும் இப்படி பண்ணிட்டாரே…! நாகசைதன்யா செயலால் செம கடுப்பில் சமந்தா ரசிகர்கள்….!!!
நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் நிச்சயதார்த்தமானது நடந்து முடிந்துள்ள நிலையில் இதனை நாக சைதன்யாவின் அப்பா நடிகர் நாகார்ஜுனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களோடு நிச்சயதார்த்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு சமந்தா ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சமந்தா இதயம் நொறுங்கிய நிலையில் காணப்படுவதாக ரசிகர்கள் அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் சமந்தா நடித்த திரைப்படங்களின் வீடியோ காட்சிகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இதுவரை தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்த நாக சைதன்யா நிச்சயம் முடிந்த கையோடு சமந்தாவோடு இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார். ஆனால் Mrs சமந்தா என்ற புகைப்படத்தை மட்டும் நீக்காமல் இருப்பதால் அதையும் நீக்குமாறு சமந்தா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.