CINEMA
என் மகனுக்கும், சோபிதா துலிபாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது…. மகிழ்ச்சியோடு பதிவிட்ட நாகர்ஜுனா…!!

நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஏழு வருடங்களாக காதலித்து இருவரும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு இடையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தை பெற்று பிரிந்துவிட்டார்கள். தற்போது இருவரும் அவரவர் வேலையை பார்த்து வருகிறார்கள்.
இதன் பிறகு நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையான சோபிதா துலிபலாவுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாவும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகர் நாகார்ஜுனா, “என் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.