CINEMA
நடிகைகள் அப்படி காட்டிக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது…. கொந்தளித்த நடிகை கௌரி கிஷன்..!!
நடிகை கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில் கடந்த 2018 ஆம் வருடம் 96 என்ற படத்தில் சிறுவயது த்ரிஷாவாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், நடிகைகள் போட்டோஷுட் நடத்தி தன்னை பொலிவுடன் காட்டிக்கொள்வதில் தவறு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஹோம்லி, கிளாமர் என்று நடிகைகளை பிரித்து பார்ப்பதே தனக்கு பிடிக்கவே பிடிக்காது எனக் கூறிய அவர், நல்ல கதைக்கு எது தேவையோ அதைச் செய்வேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தேவை இல்லாதவற்றை சகித்துக் கொண்டு, சிரித்தபடி தான் ஏற்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்