CINEMA
பெரிய இயக்குநர்கள் யாரும் என்னை கண்டுகொள்வதில்லை…. வேதனை தெரிவித்த நடிகர் அருள்நிதி…!!

நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர் இரவுக்கு ஆயிரம் கண்கள், கழுவேந்தி மூர்க்கன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருடைய நடிப்பில் அடுத்து டிமான்டி காலனி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், பெரிய இயக்குநர்களுக்கு நான் தேவைப்படுவது இல்லை என்பதால் யாரும் என்னை அணுகுவது இல்லை.
ஒரே ஜானரில் படம் நடிப்பதால், த்ரில்லர் மற்றும் கிராமப்புற கதைகளே வருகிறது. எனவே விரைவில் தன்னுடைய படங்களின் ஜானர் மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளதாகவும் கூறியுள்ளார்.