CINEMA
நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடம் இடிப்பு…. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்…!!

நடிகர் நாகார்ஜுனா தமிழ், ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் கேதாஞ்சலி படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவருடைய மகன் நாக சைதன்யா ஆவார். நாகசைதன்யாவுக்கு சோபிதாவுடன் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் மாதாப்பூரில் அமைந்துள்ள நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான N Convention தரைம ட்டம் ஆக்கப்பட்டது. அருகிலுள்ளான தம்மிடி செருவு ஏரியின் ஒரு பகுதியாக இருந்த 3.5 ஏக்கர் நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்த புகாரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.