CINEMA
ஒருநாள் நம் குழந்தைக்கு தந்தையாக…. உருக்கமாக பேசிய சமந்தா…. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்…!!
தெலுங்கு திரைத்துறையில் பிரபலமான நடிகர் நாகார்ஜுனா. இவருடைய மூத்த மகனும், நடிகருமான நடிகர் நாகசைதன்யா சமந்தாவை நான்கு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சில கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தை பெற்று பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதனுடையே நாகசைதன்யா- சோபிதாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் கவலையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகசைதன்யா- சமந்தா திருமணத்தில் சமந்தா நாகசைதன்யா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் சமந்தா உங்களால் நான் கனவு கண்டது போல வாழ்க்கை மாறுவதை என்னால் உணர முடிகிறது.
நான் அறிந்த மிகப்பெரிய மனிதர். நீங்கள் ஒரு நாள் நம்முடைய அழகான குழந்தைக்கு நல்ல தந்தையாக நீங்கள் இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். எந்த உலகிலும் எந்த நிஜத்திலும் உங்களை எனக்காக தேர்ந்தெடுப்பேன் என்று உருக்கமாக பேசி அழுதுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சமந்தா ரசிகர்கள் ஆறுதல் கூறும் விதமாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.