CINEMA
ரஜினிக்கு இணையான ரசிகர் பட்டாளம் கொண்டவர் சமந்தா தான்…. சொன்னது யார் தெரியுமா…??

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடிகர் ரஜினிகாந்திற்கு இணையாக நடிகை சமந்தாவுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். ஆலியாபட் தயாரித்துள்ள ‘ஜிக்ரா’ என்ற படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதில் பேசிய அவர், சமந்தா சம்மதித்தால் அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் சமீபத்தில் மகேஷ் பாபுவின் “குண்டூர் காரம்” திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.