CINEMA
சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு…. வேறு வேலையில் இறங்கும் சமந்தா…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா முன்னணி நடிகர்களோடு நடித்து குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இந்நிலையில் நடிகை சமந்தா முழு நேரத் தயாரிப்பாளராக மாற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் ‘தளபதி 69’ உள்பட பல படங்களில் நடிக்க “நோ” சொல்லிவிட்டாராம்.
ஒரேயொரு ஹிந்தி வெப் சீரிஸ் மட்டும் கைவசம் வைத்திருக்கிறாராம் சமந்தா. முழு நேரத் தயாரிப்பாளராக முடிவு எடுத்திருக்கிறாராம். இதற்காக ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கி மும்முரமாக பணியாற்றி வருகிறார்.