CINEMA
கோடீஸ்வரியாக நடிகை சமந்தா…. அசர வைக்கும் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா…??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா முன்னணி நடிகர்களோடு நடித்து குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ரீமேக்கில் நடித்த போது நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு இவர்கள் இருவரும் திடீரென்று கடந்த 2021 ஆம் வருடம் பிரிந்து விட்டார்கள் .அதன் பிறகு சமந்தா மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
அதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார். அதன் பிறகு ஓய்வெடுத்துவிட்டு திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது வருண் தவனுடன் இணைந்து வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை சமந்தா ரூ. 101 கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சினிமாவை விட எக்கச்சக்க விளம்பரங்களில் நடித்து தனியாக பெரிய வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் சம்பாதித்து வருகிறாராம்.