CINEMA
“அந்த மனசு தான் சார் கடவுள்” பிறந்தநாளில் விஷால் செய்த காரியம்…. மனதார வாழ்த்தும் உள்ளங்கள்….!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஷாலுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு உணவு வழங்கி கொண்டாடியுள்ளார்.