CINEMA
த்ரிஷா போட்டது AI போட்டோவா?…ஜூம் பண்ணிப் பாருங்க… உண்மையைச் சொன்ன சுசித்ரா…த்ரிஷாவின் புகைப்படத்தை கிழித்துத் தொங்கவிட்ட சுசித்ரா… இணையத்தில் வைரலாகும் பகிரங்க குற்றச்சாட்டு…!
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே ஃபிரேமில் நெருக்கமாக இருக்கும் அந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அதே வேளையில், மறுபுறம் பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இந்நிலையில், சர்ச்சைகளுக்குப் பெயர் போன பாடகி சுசித்ரா, இந்த புகைப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
அந்தப் புகைப்படம் குறித்துப் பேசியுள்ள சுசித்ரா, “த்ரிஷா அக்கா பதிவிட்ட புகைப்படம் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதோ என்ற பலத்த சந்தேகம் எனக்கு இருக்கிறது. நான் ஒன்றும் பெரிய AI நிபுணர் கிடையாது; ஆனால் ஒரு சாதாரண மனிதராகப் பார்த்தாலே அதில் இருக்கும் விஜய்யின் சட்டை இயற்கையாகத் தெரியவில்லை. அதன் காலர், துணி (Fabric) எதுவுமே நிஜமானது போல இல்லை, எல்லாம் ஒரு 2D படம் போல இருக்கிறது. கொஞ்சம் ஜூம் செய்து பார்த்தால், அந்தச் சட்டையும் டேபிளும் ஒன்றாகக் கலந்தது (Blend) போலத் தெரிகிறது, மேலும் முகமும் கழுத்தும் தனியாக அட்டாச் செய்தது போல் உள்ளது” என்று தனது சந்தேகங்களை அடுக்கிக் கூறியுள்ளார்.
மேலும், விஜய்யின் பழைய புகைப்படங்களோடு ஒப்பிட்டுப் பேசுகையில், அவரது தோள்பட்டையும் சட்டை ஃபிட்டிங்கும் இதில் விசித்திரமாக இருப்பதாகக் கூறிய சுசித்ரா, இந்த முகம் அவர் அசெம்பிளியில் இருந்தபோது எடுத்த ஸ்டில்ஸ் போல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். த்ரிஷா ஏன் இந்த புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இருப்பினும், சுசித்ரா கூறியுள்ளவை அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே என்றும், த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
