LATEST NEWS
நொடிக்கு நொடி பரபரப்பு.! “உதயநிதியை இன்றே விடுவிக்கணும்” உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு.. எங்களுக்கு அந்த எண்ணமே இல்லை… என கெத்து காட்டிய தமிழக அரசு…!!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றமும், திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே மோதல்களும் வெடித்தன. இந்தச் சூழலில், அவரை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நிலவி வந்த அரசியல் பரபரப்பு தற்காலிகமாகச் சற்றே தணியத் தொடங்கியது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக, “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. காவல் நிலைய விசாரணைக்குப் பின் அவர்விடுவிக்கப்படுவார்” என்று அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
