LATEST NEWS
“சேர்க்குறதுக்கு காசு வாங்குனா நியாயம்… வேணாம்னு சொன்னதுக்கு எதுக்குடா காசு…!” சான்ட்விச்ல சீஸை தூக்குனதுக்கே எக்ஸ்ட்ரா சார்ஜ் போட்ட கேஃபே… பிரபல உணவகத்தின் விசித்திர கட்டணத்தால் கடுப்பான சமூக வலைதளப் பிரபலம்..!!
உணவகங்களுக்குச் சென்று விருப்பமான உணவுகளை வாங்கிச் சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வழக்கமாக ஆர்டர் செய்யும் உணவில் கூடுதலான பொருட்களை இணைத்துக் கேட்கும்போது உணவகங்கள் அதற்கான தனிக் கட்டணத்தை வசூலிப்பது வழக்கம். ஆனால், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபல கேஃபே ஒன்றிற்குச் சென்ற சமூக வலைதளப் பிரபலமான வாப்மிதா சிங் என்பவருக்கு மிக விசித்திரமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அவர் அந்த கேஃபேவில் தனக்காக ஒரு சான்ட்விச்சை ஆர்டர் செய்து, அதில் ‘சீஸ் வேண்டாம்’ என்று கூறி அதனை நீக்குமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளார். வழக்கத்திற்கு மாறாக, உணவில் சீஸை நீக்கியதற்காகவே அந்த உணவகம் தனியாகக் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது. ஒரு பொருளைச் சேர்க்காமல் தவிர்ப்பதற்கே தனிக் கட்டணம் விதிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த பில்லை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
https://www.instagram.com/reel/DcVlm_ZSHH2/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அந்த உணவகத்தின் கட்டண முறையை விமர்சித்து வருகின்றனர். “கூடுதலாகப் பொருள் கேட்டால் கட்டணம் வசூலிப்பது நியாயம், ஆனால் வேண்டாம் என்று சொல்வதற்கு எதற்குக் கட்டணம்?” எனப் பல இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். உணவகங்கள் வாடிக்கையாளர்களின் சிறிய மாற்றங்களுக்குக்கூட விதிக்கும் இதுபோன்ற விசித்திரமான கட்டணங்கள் குறித்துப் புதிய விவாதத்தை இச்சம்பவம் கிளப்பியுள்ளது.
