“காதலனை பிளாக் செய்த காதலி..! அடுத்த 20-வது நிமிடத்தில் கதவைத் தட்டிய Blinkit ஏஜென்ட்… இணையத்தைக் கலக்கும் டெல்லி ஜோடியின் கியூட் சம்பவம்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காதலனை பிளாக் செய்த காதலி..! அடுத்த 20-வது நிமிடத்தில் கதவைத் தட்டிய Blinkit ஏஜென்ட்… இணையத்தைக் கலக்கும் டெல்லி ஜோடியின் கியூட் சம்பவம்..!!”

Published

on

பழைய டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் அவரது காதலனுக்கும் இடையே இரவு 10 மணியளவில் தலைவலி காரணமாக சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையும் கோபமும் அடைந்த அந்தப் பெண், தனது காதலனின் தொலைபேசி எண்ணை சுமார் 20 நிமிடங்கள் பிளாக் செய்தார். காதலியின் கோபத்தைத் தணித்து அவரைச் சமாதானப்படுத்த நினைத்த அந்த இளைஞர், உடனடியாக Blinkit செயலி மூலம் சுமார் ரூ.500 மதிப்பில் டெய்ரி மில்க் சாக்லேட், தலைவலி தைலம், சிப்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை ஆர்டர் செய்து, அவரது அறைக்கே அனுப்பி வைத்தார்.

பொருட்கள் சரியான நபரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, ஆர்டரில் காதலியின் முகவரியுடன் தொலைபேசி எண்ணையும் அவர் குறிப்பிட்டிருந்தார். சண்டை நடந்து சில நிமிடங்களே ஆன நிலையில், இரவு நேரத்தில் தனது ஆரோக்கியத்தின் மீது காதலன் காட்டிய இந்த எதிர்பாராத அக்கறை அந்தப் பெண்ணின் கோபத்தை முற்றிலும் போக்கியது. சிறிய தலைவலிக்காகக்கூட யோசிக்காமல் பணம் செலவழித்து, தேவையானப் பொருட்களைத் தேடி அனுப்பி வைத்த காதலனின் இந்தச் செயல் அப்பெண்ணை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement

இது குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்த அந்தப் பெண், சிறிய விஷயத்திற்குக்கூட இரவு நேரமென்று பார்க்காமல் கவனித்துக் கொள்பவரே உண்மையான காதலன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உண்மையான அன்பில் அக்கறையும் புரிதலும் நம்பிக்கையும் மிக முக்கியம் என்றும், தன்னைச் சமாதானப்படுத்த காதலன் எடுத்த இந்தச் சிறிய முயற்சி தன் மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். சிறிய வாக்குவாதத்தில் தொடங்கிய இந்தச் சம்பவம், காதலனின் அன்பான செயலால் மீண்டும் நெகிழ்ச்சியான காதலாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in