CRIME
“என் பெயர் ராகுல்..” அடையாளத்தை மறைத்து 2 ஆண்டுகள் காதல்.. திருமணம் என்று வந்ததும் மதம் மாறச் சொல்லி மிரட்டிய முஸ்லீம் இளைஞர்..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ‘லவ் ஜிகாத்’ தொடர்பான அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது அடையாளத்தை மறைத்த ஒரு முஸ்லிம் இளைஞர், இந்து சமூகப் பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அந்த நபர் அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, மதம் மாறும்படியும் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில், குந்தர்கி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவருடன் தனக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்பு இருந்ததாகத் தெரிவித்துள்ளார். ‘ராகுல்’ என்ற பெயரில்தான் அந்த இளைஞர் தன்னுடன் பழகியதாகவும், தனது குடும்பத்தினரும் அந்தப் பெயரையே நம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணுடன் பழகிய அந்த இளைஞர், பின்னர் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது திருமணம் செய்துகொள்ளக் கோரியபோது, இம்ரான் அப்பெண்ணை மதம் மாறும்படி வற்புறுத்தியுள்ளார்; உண்மையை அறிந்ததும் அவரும் அவரது குடும்பத்தினரும் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கினர். மேலும், தன்னிடம் உள்ள அப்பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி விடுவதாக மிரட்டி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் இம்ரான் மற்றும் அவரது சகோதரர் ஃபைஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைக் கைது செய்யக் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஊரகப் பகுதி காவல் கண்காணிப்பாளர் குன்வர் ஆகாஷ் சிங் தெரிவித்துள்ளார்.
