LATEST NEWS
ஒரு பெண் அமைச்சர்னு கூட பார்க்காம “வாடி போடின்னு சொல்லுறாங்க”… கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி.. அதைப்பத்தி இங்க பேசமுடியாது என சபாநாயகர் அதிரடி..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தவெக மற்றும் திமுக இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவையில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, “திமுகவினருக்கு வியாக்யானம் என சொன்னபோது சுருக்கென இருக்கிறது என்றால், ஒரு பெண் அமைச்சர் என்றும் பாராமல் ‘வாடி போடி’ என திமுகவினர் கூறுகின்றனர்” என்று நேரடியாகக் குற்றம்சாட்டினார். பெண் அமைச்சர் மீதான இந்த விமர்சனம் அவையில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.
அமைச்சர் ஜெகதீஸ்வரியின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் அதிகரித்ததால், சபாநாயகர் உடனடியாக குறுக்கிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார். “வெளி மேடைகளில் பேசிய பேச்சுகள் பற்றி அவையில் பேசத் தேவையில்லை; அதை இங்கு விவாதிக்க முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறி, இந்த விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு சபாநாயகர் முற்றுப்புள்ளி வைத்தார்.
சட்டமன்றத்தில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த காரசாரமான மோதல், இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் முரண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. சபாநாயகரின் தலையீட்டிற்குப் பிறகும், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் இன்று முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
