LATEST NEWS
“அரசியல்வாதிகள் கூத்தாடித்தனம் பண்ணும்போது… கூத்தாடி வரத்தான் செய்வான்” கொளுத்திப்போட்ட நடிகர் விஷால்… கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..!!
தமிழக அரசியலில் திரைத்துறை பிரபலங்களின் வருகை என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல; அது தந்தை பெரியார், அண்ணா காலத்து நாடக மேடைகளிலிருந்து தொடங்கி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியாகத் தொடரும் நீண்டகால வரலாற்றைக் கொண்டது. திராவிட இயக்கத்தில் இயங்கி வந்த எம்.ஜி.ஆர், அதிமுகவைத் தொடங்கித் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் அதிமுகவின் ஆளுமையாக உருவெடுத்து தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைிருந்தார். தற்போது அந்த வரிசையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கி வெற்றிகரமாகத் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.
கடந்த காலங்களில் திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ‘நடிகர்கள் கூத்தாடிகள்; அவர்களுக்குப் பின்னால் சேரும் ரசிகர்கள் கூட்டம் வெறும் வேடிக்கை பார்க்க வருபவர்களே தவிர, அது வாக்கு வங்கியாக மாறாது’ என்று மேடைகளிலும் விமர்சனங்களிலும் கடுமையாகப் பேசி வந்தன. ஆனால், திரைத்துறையிலிருந்து வந்து தங்களது ஆளுமையால் மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றி கொடி நாட்டிய திரையுலக நட்சத்திரங்கள், இந்தக் கூற்றைப் பொய்யாக்கி அரசியலில் தங்களது செல்வாக்கை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இந்தச் சூழலில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஷால், “அரசியல்வாதிகள் கூத்தாடித்தனம் பண்ணும்போது, கூத்தாடி அரசியலுக்கு வருவான்… மக்கள் நலனில் அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையிலும், திரைத்துறையினரின் அரசியல் வருகையை நியாயப்படுத்தும் வகையிலும் அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை, தற்போதைய அரசியல் மற்றும் திரைத்துறைக் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
