CINEMA
காலங்கள் கடந்தாலும் காதல் மாறாதே…! விக்னேஷ் சிவன்-நயன்தாரா லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தற்போது எல்லாம் சுமூகமாக முடிவடைந்து தற்போது தங்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா அப்போது தன்னுடைய மகன்களுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்தவகையில் தற்போது தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.
#Nayanthara #VigneshShivan pic.twitter.com/IeLLFgFw6c
— NayanAnu (@Anu79647933) August 24, 2024