CINEMA
ஆம்ஸ்ட்ராங்க் கொலை: நெல்சனிடம் போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…. என்ன சொன்னார் தெரியுமா…??
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நடத்தி விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் தன்னுடைய பள்ளி நண்பன் என்றும் அவனிடம் வேறு ஒரு விஷயமாக பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும் தாங்கள் நண்பர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் ஒன்றையும் போலீஸிடம் காட்டியுள்ளார் நெல்சனின் மனைவி.
இதனை அடுத்து போலீசார் இந்த வவிசாரணை குறித்து எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவோம். உடனே வர வேண்டும் எனவும் வெளியூர்களுக்கு செல்லக்கூடாது என்றும் அனுப்பி வைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, மற்றபடி ஆம்ஸ்ட்ராங்க் கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.