CINEMA
நாகசைதன்யாவுக்கும், சோபிதா துலிபாவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம்…? வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்…!!
பிரபல தெலுங்கு நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் ஏழு வருடங்களாக காதலித்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தை பெற்று பிரிந்தார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பலரும் முயன்றார்கள். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து இந்த பிரபலங்கள் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் .
இதற்கிடையே நாத சைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலமான நடிகை சோபித்தா துலிபாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தது. சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படமும் கசிந்து பேசு பொருளாகி வந்தது. இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.