CINEMA
“மிக உறுதியானவர்களுக்கு கடினமான இடையூறுகள் வரும்” வினேஷ் போகத்துக்கு ஆறுதல் சொன்ன சமந்தா…!!
ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்த அரையிறுதி போட்டியில் 50 கிலோ எடை கொண்ட பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இதனால் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேறினார் . இந்த நிலையில் உடல் எடை 100 கிராம் வரை கூடியிருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதனை அடுத்து வினேஷ் போகத்திற்கு பிரபலங்கள் பலரும் ஆறுதலாக பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சமந்தா கூறியதாவது , சில சமயங்களில் மிகவும் உறுதி தன்மை வாய்ந்த மனிதர்களுக்கு கடினமான இடையூறுகள் வரும். நீங்கள் தனி ஆள் அல்ல. உங்களுக்கு மேலே ஒரு சக்தி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுள்ளது. சிரமமான தருணங்களில் துணிச்சலாக நிற்கும் உங்களது திறன் போற்றத்தக்கது. எப்போதும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என்று கூறியுள்ளார்.