நண்பர் விஜய் CM.. !சூர்யாவுடன் நடித்த படம் மெகா ஹிட்…! உச்சக்கட்ட கொண்டாட்டம் …!சர்ச்சைகளுக்கு ‘மௌனமே’ பதில்…!ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த குந்தவை…!! – cinefeeds
Connect with us

CINEMA

நண்பர் விஜய் CM.. !சூர்யாவுடன் நடித்த படம் மெகா ஹிட்…! உச்சக்கட்ட கொண்டாட்டம் …!சர்ச்சைகளுக்கு ‘மௌனமே’ பதில்…!ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த குந்தவை…!!

Published

on

கடந்த ஆண்டு முன்னணி நடிகை திரிஷாவுக்குத் திரைத்துறையில் சற்றே சவாலான ஆண்டாகவே அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான மூன்று பெரிய திரைப்படங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் முழுமையாகக் கவரத் தவறின. அஜித்துடன் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஓரளவுக்கு வெற்றியைப் பெற்ற போதிலும், கமலுடன் நடித்த ‘தக் லைஃப்’ மற்றும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஆகிய இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் மோசமான தோல்வியையும், கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தன. இதனால் அவரது மார்க்கெட் சற்று சுணங்கியிருந்த நிலையில், இந்த புதிய ஆண்டு அவருக்கு மாபெரும் வெற்றியோடு, ஒரு சுபமான தொடக்கமாக அமைந்திருக்கிறது.

திரிஷாவின் திரைப்பயணத்தில் ’96’ திரைப்படம் எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்து, அவரை ‘பொன்னியின் செல்வன்’ குந்தவை கேரக்டர் மூலம் உச்சத்திற்கு கொண்டு சென்றதோ, அதே போன்றதொரு கம்பேக் வெற்றியை தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கொடுத்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா-திரிஷா கூட்டணி இணைந்துள்ள இத்திரைப்படம், சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோடு, தற்போது 200 கோடி ரூபாய் வசூலை நோக்கித் திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சக போட்டி நடிகையான நயன்தாராவின் மார்க்கெட் தற்போது டல்லடித்து வரும் வேளையில், இந்த மெகா ஹிட் மூலம் திரிஷாவின் காட்டில் செம மழை என திரைத்துறையினர் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

இந்த உச்சக்கட்ட மகிழ்ச்சிக்கு நடுவே, நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கருப்பு’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில சுவாரசியமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் கருப்பசாமி சிலைக்கு முன்பாக தான் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, “எல்லாம் கடவுளின் செயல்” (All God’s Work) எனக் கேப்ஷன் இட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் திரிஷா காட்டியுள்ள இந்த அர்ப்பணிப்பையும், ஆன்மீக ஈடுபாட்டையும் பார்த்த ரசிகர்கள், “மேடம் செம டெடிகேட்டடாக வேலை செய்திருக்கிறார்” என்று கமெண்ட்களைக் குவித்து, அந்தப் பதிவை சமூக வலைத்தளங்களில் சென்சேஷனல் ஆக்கி வருகின்றனர்.

அடுத்தடுத்த லைன்-அப்பாக சிரஞ்சீவியுடன் நடித்துள்ள பிரம்மாண்ட படமான ‘விஸ்வம்பரா’ ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரு புதிய படத்திலும் திரிஷா கமிட்டாகியுள்ளார். இதுதவிர, பல முன்னணி நடிகர்களின் படங்களும் அவர் கைவசம் உள்ளன. அதேசமயம், சமீபகாலமாக அவரது பெயர் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களோடு இணைத்து தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்க வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தன்னைச் சுற்றி வரும் இத்தகைய வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் அத்தனைக்கும் திரிஷா தனது வழக்கமான ‘மௌனத்தை’ மட்டுமே பதிலடியாகக் கொடுத்து, தன் கவனத்தை முழுக்க உழைப்பிலும் வெற்றியிலும் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in