CINEMA
நிச்சயம் முடிந்ததும் கணவர் குறித்து முதல் பதிவு போட்ட சோபிதா…. என்ன தெரியுமா…? செம வைரல்..!!
நடிகர் நாக சைதன்யாவும் சோபிதாவும் கடந்த சில வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.சோபிதா துலிபாவின் பெயரை கேட்டதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பொன்னியின் செல்வன் படம் தான் நினைவிற்கு வரும். இவர் அந்த படத்தின் மூலமாக தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
இந்த நிலையில் சோபிதா, நாகசைதன்யா இருவரும் ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனா இல்லத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். அதன் பிறகு தன்னுடைய வருங்கால கணவர் நாக சைதன்யாவுடன் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட சோபிதா, “யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற கேப்ஷனோடு வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram