CINEMA
தேடி சென்று கதை சொன்ன விஜய் மகன் சஞ்சய்…. நடிக்க மறுத்த சூரி…. என்ன காரணம் சொன்னார் தெரியுமா…??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் மகன் சஞ்சய். தற்போது சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். லைகா தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். தற்போது முழு கதையையும் முடித்துவிட்டு தன்னுடைய படத்திற்கு ஹீரோவை தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறாராம். இந்த நிலையில் நடிகர் சூரியை வைத்து சந்தித்து தன்னுடைய கதையை சஞ்சய் கூறியதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு சூரி, தம்பி உங்களுடைய கதை ரொம்ப அருமையா இருக்கு. கண்டிப்பா நீங்க சொன்னது வைத்து பார்த்தால் இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இது போன்ற ஒரு மாஸ் கதையில் நான் ஹீரோவாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த படத்திற்கு நான் பொருத்தமானவர் அல்ல என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.