CINEMA
தலையில் காயத்தோடு சென்னைக்கு திரும்பிய நடிகர் சூர்யா…. எப்படி இருக்கிறார்…? வெளியான தகவல்….!!!
நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன .இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பலரும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்ற போது சண்டைக்காட்சியில் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு அவருக்கு முதலில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு சூர்யா சென்னை திரும்பி உள்ளார். சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் தற்போது சூர்யா நலமோடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.