CINEMA
தள்ளிப்போகும் கங்குவா ரிலீஸ் தேதி…. நடிகர் சூர்யா கொடுத்த அப்டேட்…!!
நடிகர் கார்த்தியின் மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அக்டோபர் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் வெளிவர இருக்கிறது. அவருடைய படம் வருவதே சரி. நான் பிறக்கும்போது அவர் நடிக்க தொடங்கியவர். அவருக்கு மதிப்பளிப்பதே சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அவர் மூத்தவர். அவருக்கு நாம் வழிவிட வேண்டும். கங்குவா ஒரு குழந்தை அது பிறக்கும் தேதிதான் பண்டிகை. அன்னைக்கு கொண்டாடுவீங்கன்னு நம்புகிறேன். ஆயிரம் பேருடைய உழைப்பு வீண் போகாது என்று சூர்யா பேசியிருக்கிறார்.