LATEST NEWS
நானா! அவனா? பெரும் போராட்டம்.. கஜினியாய் மாறிய சூரியா..அஜித் முருகதாஸ்!இன்னும் நீடிக்கும் பகை..?
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித். இவரை இவரது ரசிகர்கள் தல என்று செல்ல பெயரால் அழைப்பார்கள். இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தீனா’ திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார். நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மீண்டும் ஏன் இணையவில்லை என்பதை குறித்து வலை பேச்சி அந்தணன் தனியார் youtube சேனலில் ஒன்றில் பேசியிருக்கிறார்.
‘தீனா’ படத்திற்கு பிறகு அஜித் ஏ ஆர் முருகதாஸும் மீண்டும் இணையை திட்டமிடப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கு முதலில் மிரட்டல் பெயரிட்டது. எஸ் எஸ் சக்கரவர்த்தி அந்த படத்தின் தயாரிப்பாளர். படத்தின் மூன்று நாட்களில் சூட்டிங் நடந்து விட்டது. அதன் பின்னர் எஸ் எஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்திற்கும் இடையே ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டு விட்டது. நடிகர் அஜித் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இடம் நீங்கள் என்னுடன் வந்து விடுங்கள் நாம் இந்த கதையை வேறொரு தயாரிப்பாளரை வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.
அதை ஏ ஆர் முருகதாஸ் எஸ் எஸ் சக்கரவர்த்தி இடம் சொல்ல அவரே முருகதாஸிடம் நான் உனக்கு படம் தருகிறேன்நீ என் பக்கம் நில் என்று சொல்லி பிடித்து வைத்துக்கொண்டார். இதனால் அஜித்திற்கு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் மீது மிகப்பெரிய கோபம் ஏற்பட்டுவிட்டது அதை தொடர்ந்து அந்த படமும் கைவிட்டு கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கதையை நடிகர் சூர்யாவிடம் சொல்ல அந்த கதையை அவருக்கு பிடித்து போய் அந்த திரைப்படத்தில் நடித்தார்.