GALLERY
விடாமுயற்சி ஷூட்டிங் பிரேக்… வெளிநாட்டில் குடும்பத்துடன் என்ஜாய் செய்த ‘தல’ அஜித்.. வைரலாகும் recent photos..!!
ரசிகர்களால் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் கடந்த 1992-ஆம் ஆண்டு பிரம்ம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அந்த படத்திற்காக அஜித்துக்கு சிறந்த புதுமுக நாயகன் விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு அஜித்திற்கு அமராவதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் அஜித்துக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு மோட்டார் பந்தயத்தின் போது அஜித் படுகாயம் அடைந்தார்.
கடந்த 1998-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படம் வெற்றி பெற்றது.
நடிகர் அஜித்குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம், வில்லன், வரலாறு, கிரீடம், பில்லா, அசல் மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அர்பைஜனில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நடிப்பிற்கு சிறிது நாட்கள் பிரேக் விட்டு துபாயில் குடும்பத்துடன் அஜித் நேரம் செலவிட்டுள்ளார். அவரது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் சமீபத்தில் நடந்தது.
அஜித் சொகுசு கப்பலில் இருந்தால் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
