GALLERY
பிரம்மாண்டமாக நடந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம்.. ஓன்று திரண்ட பிரபலங்கள்.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

முன்னணி நடிகரான விஜயகுமாருக்கு முத்து கண்ணு, மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர்.
இதில் விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியினருக்கு அனிதா, கவிதா என்ற மகள்களும் அருண் விஜய் என்ற மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் அனிதாவும் கவிதாவும் மருத்துவம் படித்து டாக்டர்களாகிவிட்டனர் அருண் விஜய் சினிமாவில் ஹீரோவாக வலம் வருகிறார்.
இரண்டாவது மனைவியும், நடிகையுமான மஞ்சுளாவுக்கும், விஜயகுமாருக்கும் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
மூன்று மகள்களும் சினிமாவில் நடிகைகளாக அறிமுகம் ஆனார்கள்.
இந்நிலையில் வனிதாவின் முதல் மகளான தியாவிற்கும், திலன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஷர்ட்டன் கிராண்ட் ஹோட்டலில் வைத்து நேற்று முன்தினம் தியாவுக்கும் திலனுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் உறவினர்கள் திரை பிரபலங்கள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.
முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், சூர்யா குடும்பத்தினர், மீனா, சினேகா, பிரசன்னா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.