தம்பியை ஹீரோவாக களமிறக்கும் விஷ்ணு விஷால்.. கோலாகலமாக நடந்த படத்தின் பூஜை.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

GALLERY

தம்பியை ஹீரோவாக களமிறக்கும் விஷ்ணு விஷால்.. கோலாகலமாக நடந்த படத்தின் பூஜை.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

Published

on

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி எஃப் ஐ ஆர், லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். அவர் தனது படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.

Advertisement

இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது தம்பி ருத்ராவை நடிகராக அறிமுகம் செய்ய முடிவு எடுத்தார்.

அதன்படி விஷ்ணு விஷாலின் ஸ்டுடியோஸ் நிறுவனம் ருத்ரா அறிமுகமாக உள்ள ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தை தயாரிக்கிறது. படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடி கதை அம்சம் உடையது.

Advertisement

டி.கம்பெனி நிறுவனம் அந்த படத்தை இணை தயாரிப்பு செய்கிறது. ஓஹோ எந்தன் பேபி படத்தை புதுமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார்.

இந்த படத்தில் ருத்ராவுக்கு ஜோடியாக பாலிவுட் கதாநாயகி மிதிலா பால்கர் நடிக்கிறார். ஓஹோ எந்தன் பேபி படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க உள்ளார்.

Advertisement

அச்சம் என்பது மடமையடா முதல் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இன்று ஓஹோ எந்தன் பேபி படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் பட குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement

படத்தின் ஷூட்டிங்கை சென்னை, கோவா மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்த பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement