நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா..? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா..? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

Published

on

முன்னணி நடிகையாக வளம் வந்த ரம்யா கிருஷ்ணன் 14 வயதிலேயே நடிக்க ஆரம்பித்தார். கடந்த 1985-ஆம் ஆண்டு ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த வெள்ளை மனசு படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து 1986-ஆம் ஆண்டு தெலுங்கில் பாலே மித்ருலு படம் வெளியானது.

Advertisement

இதனையடுத்து கேப்டன் பிரபாகரன், அம்மன், படையப்பா, பஞ்சதந்திரம், பாறை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அமிதாப்பச்சன், பிரபு, நாகார்ஜுனா, சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Advertisement

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் ராஜமாதா சிவகாமி தேவியின் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Advertisement

கடந்த வருடம் வெளியான ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சுமார் 20 வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சியில் நடுவராக ரம்யா கிருஷ்ணன் பங்கேற்றார்.

Advertisement

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கவேட்டை விளையாட்டு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்தார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் ரம்யா கிருஷ்ணன் கலக்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம், ராஜகுமாரி, வம்சம் ஆகிய சீரியல்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை கடந்த 2003-ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனின் மகன் ரித்விக் கிருஷ்ணன் தனது 13-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in