மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித்.. விமர்சையாக நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

GALLERY

மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித்.. விமர்சையாக நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

Published

on

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

மேலும் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் விடாமுயற்சி படத்தில் நடிக்கின்றனர். நடிகர் அஜித் நடிகை ஷாலினியை கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அமர்க்களம் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Advertisement

பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 16 வயதுடைய அனோஷ்கா என்ற மகளும், 9 வயதுடைய ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது ஆதவிக் சென்னையின் எப்சி என்னும் கால்பந்து கிளப்பின் ஜூனியர் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டு மீது அவருக்கு ஆர்வம் அதிகம்.

Advertisement

இதனால் அஜித் எனது மகனின் ஆசைப்படி கால்பந்து தீமுடன் அவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்காக வெட்டப்பட்ட கேட்கும் புட்பால் வடிவமைப்பில் இருந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் பேனரில் ரொனால்டினோ, டேவிட் உள்ளிட்ட கால்பந்து ஜாம்பவான்களின் புகைப்படங்கள் இருந்துள்ளது.

மேலும் புட்பால் ஜெர்சி அணிந்தபடியே ஆத்விக் கேக்கை வெட்டியுள்ளார். நடிகை ஷாலினி தனது மகன் பிறந்த நாளில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஆத்விக் சிறந்த கால்பந்து வீரராக வரவேண்டும் என வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement