GALLERY
வீரம் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது..? திரைப்பட விழாவில் கலந்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ..

2014ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் வெளியானது. ஆனால் தமிழில் தான் அதிக வசூல் குவித்து சாதனை படைத்தது.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான், குழந்தை நட்சத்திர நடிகை யுவினா பார்த்தவி.
இவர் தமிழில் வெளிவந்த ஸ்ட்ராபெரி, சர்கார், மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான நடிகை யுவினா பார்த்தவி தற்போது சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக் என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், குழந்தை நட்சத்திர நடிகையாக பார்த்த யுவினா தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்த்துள்ளார்.