GALLERY
ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் இறப்பு.. மலர் தூவி அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.. இணையத்தில் வைரலான போட்டோஸ்..!!
பிரபல முன்னணி நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார்.
அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள தனது அடுத்த படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.
நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி உதவி தொகை தேவைப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். இதுபோல தனது ரசிகர்களையும் உதவிகள் செய்ய சூர்யா அறிவுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்ற விழுப்புரம் மாவட்ட தலைவர் மணிகண்டன் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு 40 வயதாகிறது.
மணிகண்டன் இறந்ததை அறிந்த நடிகர் சூர்யா இன்று மணிகண்டனின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
பின்னர் மணிகண்டனின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து நடிகர் சூர்யா மணிகண்டனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியது மட்டுமில்லாமல் நிதி உதவி வழங்கியுள்ளார்.
உயிரிழந்த மணிகண்டன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பல சமூக சேவைகளை செய்து நேர்மையாக வாழ்ந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை எதிரே நடந்த விபத்தில் சிக்கி மணிகண்டன் இறந்தது குறிப்பிடத்தக்கதாகும்.