LATEST NEWS
தோல்வியில் முடிந்த சூரியா-வெற்றிமாறன் பேச்சுவார்த்தை.. வாடிவாசல் படத்தில் என்ட்ரி கொடுக்கும் புதிய ஹீரோ யார் தெரியுமா..??
பிரபல இயக்குனரான வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க திட்டமிட்டுருந்தார். ஆனால் விடுதலை 2, சூர்யாவின் கங்குவா படம் கர்ணன் படம் உள்ளிட்ட காரணங்களால் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தாமதமானது. மேலும் வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கிறார்.
ஏற்கனவே அமீருக்கும் சிவக்குமார் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் சூர்யாவும் வெற்றி மாறனும் சந்தித்து பேசி உள்ளார்களாம்.
ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் சூர்யாவுக்கு திருப்தி இல்லாததால் வாடிவாசல் படத்திலிருந்து விலகுவதாக கூறப்படுகிறது. அப்படி சூர்யா விலகினால் அவருக்கு பதிலாக தனுஷ் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யா மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் நடிக்கவில்லை என்றால் தனுஷ் தான் நடிப்பார் என பேசப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. திரை வட்டாரத்தில் இது பற்றி பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கதாகும்.