9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கும் எஸ்.ஜே சூர்யா.. கில்லருக்காக ஸ்பெஷலா அதை பண்ணிருக்காரு.. என்ன தெரியுமா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கும் எஸ்.ஜே சூர்யா.. கில்லருக்காக ஸ்பெஷலா அதை பண்ணிருக்காரு.. என்ன தெரியுமா..?

Published

on

எஸ்.ஜே சூர்யா நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக தன்மைகளை கொண்டவர். எஸ்.ஜே சூர்யா இயக்கிய வாலி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இதனையடுத்து எஸ்.ஜே சூர்யா குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

கடைசியாக எஸ்.ஜே சூர்யா இயக்கிய இசை படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Advertisement

தற்போது தனுஷின் ராயன் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே சூர்யா நடித்து வருகிறார். சுமார் 6 ஆண்டுகளாக தான் இயக்கி தயாரித்து நடிக்க போகும் படத்திற்கான கதையை எஸ்.ஜே சூர்யா உருவாக்கி வருகிறாராம். அந்த படத்திற்கு கில்லர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே எஸ்.ஜே சூர்யா வெளிநாட்டிலிருந்து ஒரு காரை வாங்கி வந்து பராமரித்து வருகிறாராம். படத்தில் பிஸியாக இருக்கும் நேரம் தவிர்த்து கில்லர் படத்தின் ஷூட்டிங்கை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முடிக்கலாம் என எஸ்.ஜே சூர்யா திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Advertisement

Continue Reading
Advertisement