LATEST NEWS
எங்கேயோ தப்பு நடந்துருக்கு.. ஓட்டு போட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற நடிகர் சூரி.. வைரலாகும் வீடியோ..!!

பிரபல நடிகரான சூரி வளசரவாக்கத்தில் இருக்கும் வாக்கு சாவடி மையத்திற்கு தனது மனைவியுடன் வாக்களிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்த போது சூரியின் பெயர் பட்டியலில் இல்லை.
இதுகுறித்து அவர்கள் சூரியிடம் கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றத்துடன் வாக்களிக்காமல் சூரி வெளியே வந்தார். இது குறித்து சூரி கூறியதாவது, எனது ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக வந்தேன். ஆனால் அது முடியவில்லை.
மனவேதனையாக உள்ளது. கடந்த எல்லா தேர்தல்களிலும் எனது உரிமையை தவறாமல் செலுத்தி இருக்கிறேன். இந்த முறை வாக்குச்சாவடியில் எனது பெயர் விடுபட்டு விட்டதாக கூறுகின்றனர். தவறு எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.
அடுத்த தேர்தலில் எனது வாக்கை கண்டிப்பாக செலுத்துவேன் என வேதனையோடு கூறியுள்ளார்.இது குறித்த வீடியோவும் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram