LATEST NEWS
நான் சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் அதுதான்.. உண்மையை போட்டுடைத்த நடிகை மும்தாஜ்… வைரலாகும் வீடியோ..!!
நடிகை மும்தாஜ் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான மோனிஷா என் மோனாலிசா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனையடுத்து சத்யராஜ் நடிப்பில் வெளியான மலபார் போலீஸ் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜயின் குஷி, பட்ஜெட் பத்மநாபன், சாக்லேட், லூட்டி, வேதம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டும் இல்லாமல் மும்தாஜ் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்தார். டி.ராஜேந்தரின் வீராசாமி படத்தில் மும்தாஜ் கடந்த 2007-ஆம் ஆண்டு கதாநாயகியாக நடித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2015-ஆம் ஆண்டு தெலுங்கில் டாமி என்ற படம் வெளியானது. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் மும்தாஜ் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது ஏன் சினிமாவில் இருந்து விலகினேன் என மும்தாஜ் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, நான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவள்.
எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். ஆரம்பத்தில் குர்ஆனில் சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்து அர்த்தம் தெரியாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதன் அர்த்தம் எனக்கு புரிய ஆரம்பித்தது. எனக்குள் மாற்றமும் ஏற்பட்டது. இதனால் சினிமா இனி வேண்டாம் என முடிவு செய்து விலகி விட்டேன். நான் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ் தான் காரணம்.
வெளியே செல்லும்போது கண்ணியமான ஆடைகளை அணிந்தேன். சினிமாவில் நீச்சல் உடையில் நடித்த நான் இப்போது இப்படிப்பட்ட விடைகள் அணிவது நிச்சயமாக அனைவருக்கும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.