LATEST NEWS
தனது வாக்கை பதிவு செய்த விஜய்.. கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
இதனால் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்கை பதிவு செய்கின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பனையூரில் இருக்கும் தனது வீட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்கு சாவடிக்கு காரில் சென்று வாக்களித்துள்ளார்.
அதிகாலை முதல் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டிற்கு முன்பு காத்துக் கொண்டிருந்தனர். இதே போல வாக்களிக்கும் இடத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
தற்போது நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு விஜய் காரில் வந்து இறங்கிய போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
BREAKING :
Thalapathy Vijay arrived at Vels School to cast his vote 🤍 #LokSabhaElections2024 #ThalapathyVijay pic.twitter.com/287kozmq9I
— Galatta Media (@galattadotcom) April 19, 2024